BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மணப்பாறை: பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதிய விபத்து – மூன்று பேர் பலி.: மணப்பாறை அருகே சமயபுரத்திற்கு பாதையாத்திரை சென்ற பக்தர்கள் மீது தக்காளி லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

 மணப்பாறை அருகே சமயபுரத்திற்கு பாதையாத்திரை சென்ற பக்தர்கள் மீது தக்காளி லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியிலிருந்து சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் மாலையில் பாதையாத்திரையாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு, புறப்பட்டனர். இதில் பல்வேறு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் ஒன்று சேர்ந்து நடைபயணம் மேற்கொண்டனர். அப்போது, திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இடையப்பட்டியான்பட்டி அருகே சாலையோரம் நடந்து சென்ற பக்தர்களுக்கிடையே தக்காளி ஏற்றிச் சென்ற லாரி புகுந்தது. இதில், சீகம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, எரியோடு எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த சேகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பெண்கள் உள்ளிட்ட 7 பக்தர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற நெடுஞ்சாலை விபத்து மீட்புக்குழு மற்றும் போலீசார் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அனைவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு பெண் பக்தர் சிகிச்சை பலனின்றி உயிழந்தார். இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )