BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சியில் தலைக்கேறிய போதையால்
65வயது மூதாட்டியை கற்பழிக்க முயன்றவர் கைது.

திருச்சி திருவானைக்காவல் தெற்கு உத்திர வீதி பகுதியை சேர்ந்தவர் சாந்தி (65). கணவர் இறந்துவிட்டார்.
இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் திருமணம் முடித்து மதுரையில் வாழ்ந்து வருகிறார்.

 

இவரது மகன் பக்கத்து தெருவில் குடியிருந்து வருகிறார்.
சாந்திக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்தக் கொதிப்பு நோய்கள் உள்ளதால் அவரால் எழுந்து நடக்க முடியாது. இதனால் அவர் வீட்டின் திறந்து வைத்தே தூங்கிக் கொண்டிருந்தார்.

 


அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ‌ குடிபோதையில் அவரது வீட்டில் நுழைந்து கதவை தாழ்ப்பாள் இட்டு அவரைத் கற்பழிக்க முயற்சித்தார். அப்போது அவர் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் விரைந்து கதவை திறந்தபோது ராஜா அவர்களை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றார்.
உடனடியாக ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரில் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிந்து தப்பி ஓடிய அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )