மாவட்ட செய்திகள்
உங்கள் வாக்கு செல்லாத வாக்காக ஆகிவிடக்கூடாது அதனால் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்-
ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பேச்சு.
திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் அதிமுக- திமுகவிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் திமுகவினரை ஆதரித்து கடந்த 2 நாளைக்கு முன்பு மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் அமைச்சர் ஐ.பெரியசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார், பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் 4வது வார்டில் நாகராஜ், 5வது வார்டில் சுவாதி, 6வது வார்டில் சரண்யா ஆகியோரை ஆதரித்து மருதாணி குளம், கோவிந்தாபுரம், ராமநாதபுரம், பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில்-
தாங்கள் செலுத்தக்கூடிய வாக்கு செல்லாத வாக்காக ஆகிவிடக்கூடாது. அதனால் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்கை செல்லும் வாக்காக வாக்களியுங்கள் என்றும், திமுக அரசின் சாதனைகளையும் கூறி வாக்குகள் சேகரித்தார். இதில் முன்னாள் சேர்மன்கள் சந்திரசேகர், நடராஜன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.