மாவட்ட செய்திகள்
அரசுப் பள்ளிக்கு தனது சொந்தமான 20 லட்சம் மதிப்புள்ள 10 சென்ட் நிலத்தை இலவசமாக எழுதிக்கொடுத்த மருத்துவர் செயல் பாராட்டு பெற்றுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே தொடுகாடு நமச்சிவாயபுரம் பகுதியில் 1962 ஆண்டு கட்டப்பட்ட பழமையான பள்ளி கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் இருந்து வருவதால் மாணவர்கள் நலன் கருதி அத்தகைய பள்ளியை இடித்துவிட்டு.
புதிய பள்ளி கட்டடங்களை கட்டுவதற்கு போதிய இடமில்லாமல் இருந்துள்ளது.
இந்நிலையில்
ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் முயற்சியால் பள்ளி அருகே உள்ள மருத்துவர் ஜெகதீஷ் குமார் சொந்தமான ரூபாய்20 லட்சம் மதிப்புள்ள 10 சென்ட் (4360 சதுரடி) நிலத்தை அரசு பள்ளிக்கு இலவசமாக வழங்க முன்வந்துள்ளர்.
இன்றைய தினம் தனது சொந்த நிலத்தை அரசு பள்ளி கட்டுவதற்கு கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் முன்னிலையில் ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதற்கான ஆவண கோப்புகள் கையெழுத்திட்டு அரசுக்கு தனது நிலத்தை ஒப்படைத்துள்ளார்.
அரசு பள்ளிக்கு தனது சொந்தமான நிலத்தை இலவசமாக எழுதிக் கொடுத்த மருத்துவர் செயலை அக்கிராம மக்கள் வெகுவாக அவரைப் பாராட்டி உள்ளனர்.