மாவட்ட செய்திகள்
தேனி: ஒரு வருட தடை நீக்கப்பட்டு கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி.
அறம் செய்திகள்: கொரோனா தொற்றால் ஒரு வருடமாக சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு கும்பக்கரை அருவியில் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தொடங்கியதன் காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடைவிதித்தனர். இந்நிலையில் நோய் தொற்று குறைந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரியின் உத்தரவின் அடிப்படையில் சுற்றுலா பயணிகளுக்கு கும்பக்கரை அருவி திறக்கப்பட்டுள்ளது.
CATEGORIES தேனி