மாவட்ட செய்திகள்
குமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியில் தனியார் கல்லூரில்கேரளாவை சேர்ந்த குதிரை பயிற்றுனர் தற்கொலை காவல் துறை விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லையான படந்தாலுமூடு பகுதியில் அமைந்துள்ள கிரேஸ் கல்லூரியில் குதிரை பயின்றுனராக கேரளா மாநிலம் பாலராமபுரத்தை சேர்ந்த 25வயதான அகில் எனாபவர் பகுதிநேர ஊழியராக பணியாற்றிவந்துள்ளார்.
குதிரைகள் மீது அளவுகடந்த பாசமுடைய அகில் வேறுவேலைகளுக்கு செல்லாமல் குதிரை பயிற்றுவதையே விருப்பணியாக செய்துவந்துள்ளார் இவரது பெற்றோர் மின்வாரியத்தில் பணியாற்றிவருகின்றனர் இந்நிலையில் அகில் ஐடிஐ படித்துவிட்டு வேறு வேலைக்கு செல்லாமல் குதிரை மேய்பாளராக பணியாற்றியது பெற்றோருக்கு பிடிக்கவில்லை இதனால் அகிலை கோபத்துடன் திட்டியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த அகில் கல்லூரி வளாகத்தில் குதிரை கட்டும் இடம் அருகே தான் தங்கியிருந்த அறை அமைந்துள்ள தோப்பு பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் இன்று காலை உடலை பார்த்த கல்லூரி ஊழியர்கள் களியக்காவிளை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தற்கொலை செய்த அகிலின் உடலை கைபற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.