மாவட்ட செய்திகள்
ஆத்தூர் பாரத் ஸ்டேட் வங்கி சார்பில் சாலை விபத்தில் உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்திற்கு விபத்து காப்பீட்டு தொகையாக ரூபாய் 44 லட்சத்திற்கான காசோலையை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.
பாரத் ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 18. வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்களுக்கு விபத்து காப்பீடு தொகையாக நூறு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை செலுத்தினால் இரண்டு லட்சம் ரூபாய்.முதல் 20 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தில் செயல்ப்பட்டு வரும் பாரத் ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருந்த சீனிவாசன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் இவரது மனைவி. செல்வத்திடம் விபத்து காப்பீட்டு தொகையாக நான்கு லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
அதே போல் ஆத்தூர் வங்கியில் கணக்கு வைத்திருந்த ஆத்தூர் பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் வெவ்வேறு சாலை விபத்தில் உயிழந்தனர். இவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் தல 20 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 44 லட்சம் ரூபாயை இழப்பீடு தொகைக்கான காசோலையை ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.சரண்யா வழங்கினார். இந்த நிகழ்சியில் பாரத் ஸ்டேட் வங்கியின் சேலம் மண்டல மேலாளர் ஸ்ரீஜா,ஆத்தூர் கிளை மேலாளர் யேகேந்திரகுமார், மக்கள் தொடர்பு அதிகாரி நித்தியநந்தர்,மேலும் விபத்து காப்பீடு குறித்து கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய திவ்யாவிற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி.சரண்யா வழங்கினார்.