மின்வாரிய கவனக்குறைவால் ஊழியர் கேங்க்மேன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மின் வாரிய நிர்வாக குறைபாடு காரணமாக மின் வாரிய கேங்மேன் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விட்டார். காளையார்கோவிலில் மின் பழுதை சரி செய்ய உத்தரவிட்டு அதன் அடிப்படையில் பணி செய்த மின்வாரிய ஊழியர் வினோத்குமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்துவிட்டார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் கூறுவியல் செய்யப்பட்டது .
வினோத்குமார் இறப்புக்கு காரணமான மின்வாரிய நிர்வாகம் அவர் குடும்பத்திற்க்கு ரூபாய் 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் இவருடைய குடும்ப வாரிசுக்கு மின்வாரியத்தில் பணி வழங்க வேண்டும். இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மின்சாரம் தாக்கி உயிரழந்த மின்வாரிய ஊழியர்கள் பகல் 3 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அதிகாரிகளுக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்சினையில் மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் கருணாநிதி, மாநில பொதுச்செயலாளர் உமாநாத் ஆகியோர் கூறும்போது மின்வாரிய அதிகாரிகள் கவனக்குறைவாக காரணமாக மின்சாரம் தாக்கி கேங்மேன் மின் ஊழியர் வினோத்குமார் வயது35 பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரழந்துவிட்டார்
