BREAKING NEWS

முக்கிய செய்திகள்

டெல்லியில் போராட புறப்பட்ட
அய்யாகண்ணு – ரயில் நிலையத்தில் குவிந்த காவல்துறையினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்து விவசாய பொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று காலை கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சென்று போராடுவதற்காக காலை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் திருச்சி ரயில்வே நிலையத்தில் இருந்து பல்லவன் ரயில் மூலம் புறப்பட்டு சென்றார்.

கடந்த பல முறை டெல்லிக்கு போராட்டத்திற்காக செல்ல முயன்றபோது காவல்துறை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இம்முறை டெல்லியில் சென்று போராடுவதற்காக நீதிமன்றம் மூலம் உரிய அனுமதி பெற்று செல்வதால் காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தவில்லை. ஆனாலும் எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு ரயில் நிலையத்தில் ஏராளமான காவல்துறையினர் அவர்கள் புறப்பட்டுச் செல்லும் வரை பாதுகாப்பாக பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

 

தொடர்ந்து பேட்டியளித்த அய்யாக்கண்ணு
2019ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மோடி விவசாய பொருட்களுக்கு இருமடங்கு விலை தருகிறோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.
18 ரூபாய் விற்ற நெல்லுக்கு 54 ரூபாய் தருகிறேன் எனக் கூறினார். 2,700 ரூபாய் விற்று கரும்பிற்கு 8100 ரூபாய் தருவதாக தெரிவித்தார்.

 


விவசாயம் செய்வதற்கு ஆட்கள் இல்லாமல் இருக்கிறார்கள். அனைவரும் நூறு நாள் வேலைக்கு சென்று விடுகின்றனர்.
கோடை காலங்களில் வேலை கொடுப்பதற்காக 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆனால் இப்போது நடவுக்கும் ஆட்கள் இல்லை அறுவடைக்கு ஆட்கள் இல்லை. இது எல்லாவற்றிலிருந்தும் மோடி எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எங்களை காப்பாற்றவில்லை எங்களது வேஷ்டி, சட்டையையும் எடுத்து கொண்டார். கோமணத்தோட விட்டுவிட்டார். அந்த கோமணத்தையும் பிடுங்க கூடாது என்பதற்காக தான் டெல்லி சென்று லக்னோவிலும் போராடப் போகிறோம். எங்களை காப்பாற்றுவதாக சொன்ன மோடி எங்களை காப்பாற்றவில்லை என தெரிவித்தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )