முதுகில் அலகு குத்தி பல்லாக்கில் பக்தர்கள் தொங்கியபடியும் பால்குடங்களை ஏந்தியும் 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

தஞ்சை கீழவாசல் அருகே உள்ள சியாமளா தேவி அம்மன் கோவிலில் 58வது பால்குடம் எடுக்கும் விழா நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து கொடிமரத்து கொடி மரத்து மூலை வழியாக தலையில் பால் குடங்களை ஏந்தியும் கன்னத்தில் அலகு குத்தியும் தனது முதுகில் அலகு குத்தி பல்லாக்கில் தொங்கிய படியும் தனது காணிக்கைகளை பக்தர்கள் ஊர்வலமாக வந்து செலுத்தினர்.

மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்தக் கோவில் நிகழ்ச்சியும் நடைபெறாமல் இருந்த நிலையில் இன்று தஞ்சையில் கோலாகலமாக பால்குடம் மற்றும் அலகு குத்தி கடவுளுக்கு காணிக்கை செய்யும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி தஞ்சை கீழவாசல் ஷியாமளா தேவி அம்மன் கோவிலுக்கு சென்றதையடுத்து எடுத்துவந்த பால் குடத்தில் உள்ள பாலினை அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
