முத்துராமலிங்க தேவரின் 119-வது பிறந்தநாள் விழா! குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்!

முத்துராமலிங்க தேவரின் 119-வது பிறந்தநாள் விழா! குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்!

அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு இயக்கத்தின் நிறுவனர் ம.சி. கார்த்திக்.ஜி தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ராம. சரவணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக டி.ஜே. கோபி சங்கர் கலந்து கொண்டார்.

மேலும், இயக்கத்தின் பொறுப்பாளர்கள் எஸ். ரமேஷ், டி.ஜே. ரமேஷ், ஜி. கிருஷ்ணமூர்த்தி, ஜி. வினோத்குமார், எஸ். சந்தோஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சமூக சேவையை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த ரத்த தான முகாம், தேவர் ஐயாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS