முந்திரி வியாபாரத்தில் பங்குதாரரை ஏமாற்றி ரூ.3.10 கோடி மோசடி
முந்திரி வியாபாரத்தில் பங்குதாரரை ஏமாற்றி ரூ.3.10 கோடி மோசடி.
பெரம்பலூர் மாவட்டம் சோமநாத புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நானும் தஞ்சையை அடுத்த மின்னத்தூர் குருங்குளம் மேற்குப் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரும் இணைந்து பங்குதாரராக முந்திரி வியாபார கம்பெனி நடத்தி வந்தோம். கம்பெனியின் வரவு, செலவு கணக்குகளை நான் பார்த்து தணிக்கை செய்தபோது சிவக்குமார் ரூ.3 கோடியே 10 லட்சம் அளவுக்கு முறைகேடாக பயன்படுத்தி மோசடி செய்ததை கண்டுபிடித்தேன்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது பணத்தை திருப்பி தருவதாக என்னிடம் அக்ரிமெண்ட் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டார். ஆனால் பல நாட்களாக திருப்பித் தரவில்லை.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது முறையான பதிலும் இல்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து என்னிடம் மோசடி செய்த பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) ரவிமதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.