முன்னாள்மாவட்ட அமர்வு நீதிபதியின் பசுமைதுவக்கம். தேனி மாவட்டம், மேலப்பூலானந்தபுரத்தில் பனை நடவு செய்யப்பட்டது.

தேனி மாவட்டம், மேலப்பூலானந்தபுரத்தில் பனை நடவு செய்யப்பட்டது.
சின்னமனூர் தாய் டிரஸ்ட் மற்றும் போடி திருமலாபுரம்நாடார் மேனிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து குளத்துக்கரையில் 1000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி, திரு,A. முகமது ஜியாபுதின் அவர்கள் களப்பணியைத் துவக்கி வைத்தார். ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி,S. மலர்க்கொடிசேகர்அவர்களும்,
கோயம்புத்தூர் மாவட்ட வழக்கறிஞர் சேவா சங்க இயக்குனர், திரு,M. முகமது நதீர் அவர்களும், , தாய் தமிழ் டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டி, ரொட்டேரியன் S.செல்வக்குமார் அவர்களும்,
முனைவர் திரு.K.K.முருகேசன் அவர்களும் களப்பணிக் கான ஏற்பாடுகளை தயார் செய்தனர், பசுமையின் அர்ப்பணிப்பாளர் போடி பனை முருகன் அவர்கள் பனை விதை கொடுத்து நடவு செய்தார், இந்நிகழ்வில். கிராம நிர்வாக அலுவலர் திருமதி, M. உமாமகேஸ்வரி,
உத்தமபாளையம் பசுமைக் காவலர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ஜே ஜே ஜெயக்குமார், மக்கள் தொண்டன் ஜெயச்சந்திரன், வறியவர்களின் வழிகாட்டிசார்பாக, கோகிலா முருகேசன், அம்மாபட்டி ரவி,
ஆனைமலை தங்கம், மக்கள் நலப்பணியாளர் திருமதி, மகேஸ்வரி, பள்ளி மாணவர்கள், மகளிர் குழுவினரும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.