மூக்கூடல் கிராமத்தில் புகழ்பெற்ற 200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ உச்சிமகாளியம்மன் திருக்கோயில் ஆலய அஷ்ட பந்தன திருக்குட நன்னீராட்டு பெருவிழா.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள மூக்கூடல் கிராமத்தில் புகழ்பெற்ற 200 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ உச்சிமகாளியம்மன் திருக்கோயில் ஆலய அஷ்ட பந்தன திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிவஸ்ரீ அருண்கேசவ் சிவாச்சியர், சிவஸ்ரீ சிவசங்கர் சர்மா தலைமையில் நடைபெற்றது.
புன்னிய தளங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் ஊர்வலமாக கொண்டு வந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு தண்ணீர் அபிஷேகம் செய்து. பின்னர் கோபுரங்களுக்கு தீபாதரணை காட்டி பொதுமக்களுக்கு பூ மற்றும் புனித நீர் தெளிக்கப்பட்டன.
பின்னர் யாக சாலை குண்டம் அமைந்து உள்ள இடத்தில் சாமி தரிசனம் செய்து கும்பாஷக விழாவில் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பாரம்பரியமான வள்ளிகும்மி ஆட்டம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது 500க்கும் மேற்பட்டோர்.
ஓன்று கூடு பாரம்பரியமான பாடல்கள், தமிழ் கடவுகள் பாடல்களுககு நடனம் ஆடியது மேலும் கேரளாவின் பாரம்பரியமான செண்டை மேளம், வள்ளி கும்பியாட்டத்தை ஆகியவற்றை ஏராளுமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.