மூலைக்கரைப்பட்டி நகரத்தின் சார்பாக எஸ்டிபிஐ கட்சியின் 14 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை நோட்புக் வழங்கும் விழா.

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி நகரத்தின் சார்பாக எஸ்டிபிஐ கட்சியின் 14 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை நோட்புக் வழங்கும் விழா நகர தலைவர் கலில் ரஹ்மான் தலைமையில் திருவள்ளுவர் தெருவில் வைத்து மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. நகர செயலாளர் ஷேக் மைதீன் வரவேற்புரையாற்றினர்.

நாங்குநேரி தொகுதி தலைவர் ஏர்வை ஆஷிக், நகர பொருளாளர் முகம்மது அலி, தொகுதி செயற்குழு உறுப்பினர் ரவி, இணை செயலாளர் அமீர் கான், செய்யதலி, சுல்தான் பாதுஷா, அப்துல் கரிம், ஜிமின், ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு அழைப்பாளராக புறநகர் மாவட்ட தலைவர் M.K.பீர்மஸ்தான், துணை தலைவர் முல்லை மஜித், பொதுசெயலாளர் களந்தை மீராசா, அமைப்பு பொது செயலாளர் சிராஜ், மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் ஏர்வை இம்ரான் அலி,

மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.S.A. கரிம் மாவட்ட பொருளாளர் ஏர்வை இளையராஜா, வழக்கறிஞர் ஷபி வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் அம்பை ஜலில் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஆழ்வார், உதவி தலைமை ஆசிரியர் அழகு லிங்கம், பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி.பார்வதி, மேலாண்மை குழு தலைவி மும்தாஜ் ஆலிமா, 10வது வார்டு உறுப்பினர் ஆதம், திமுக நகர செயலாளர் முருகையா பாண்டியன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மகாராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர், மேலும் 14வது ஆண்டு துவக்க விழாவில் சுமார் 80 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட் புக் வழங்கப்பட்டது. இறுதியாக முல்லை நகரத்தின் செயலாளர் S. பீர்முகைதின் நன்றியுரையாற்றினார்.
