மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு உத்தரவை மதிக்காமல் ஏழை எளிய மாணவிகளை சேர்க்கையில் குளறுபடி ஏற்படுத்தும் ஆசிரியர்கள்—! கல்வித்துறை உயர் அதிகாரி நடவடிக்கை எடுப்பார்களா….?

தமிழக அரசு ஏழை எளிய மாணவி.மாணவர்கள் நலன் கருதிபள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பதற்கு பல்வேறு புதிய திட்டங்களை வகுத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில்ஏழை எளிய மாணவ மாணவிகள் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றுதமிழக அரசு உத்தரவு இருந்தும் அரசு உத்தரவை மதிக்காத மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் மதிப்பெண் அடிப்படையில் மாணவிகளை பள்ளியில் சேர்ப்பதாக கூறப்படுகிறார்கள்.
மேலும் இந்த நகராட்சி பெண்கள்மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவிகளுக்கு கட்டாயமாக பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்பி உள்ளார்கள் மேட்டுப்பாளையத்தில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று தான் உள்ளது என்பதாலும் இதனால் வேதனையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
இருப்பினும்தலைமை ஆசிரியர் கூறினாலும் பள்ளியில் உள்ள சில ஆசிரியர்கள் மாணவிகளை மார்க் குறைவாக எடுத்துள்ளீர்கள் எனது வகுப்பிற்கு வரக்கூடாது என்று ஒரு மையில் பேசி வருகிறார்கள் என்றுகூறப்படுகிறது இது சம்பந்தமாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்அதிகாரிகளும் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் பள்ளிக்கு நேரில் ஆய்வு செய்து கடந்தாண்டு அப்பள்ளியில் பயின்ற மாணவிகள் தற்போது பள்ளியில் பயின்று வருகிறார்கள்.
எதற்காக அவர்களுக்கு அப்பள்ளியில் இடம் ஒதுக்கப்படவில்லை என்று விசாரணை செய்து இதற்கு உடந்தையாக இருந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு சம்பந்தப்பட்ட மாணவிகளை மீண்டும் அதே பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் ஏழை எளிய கூலி தொழிலாளர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…!