BREAKING NEWS

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 10 நாட்களில் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 10 நாட்களில் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சம்பா தாளடி என மூன்று போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஜனவரி 28ஆம் தேதி மூடப்படுவது வழக்கம் ஆண்டுதோறும் மே மாதங்களில் மேட்டூர் அணையில் 70 75 அடி மட்டுமே நீர் இருக்கும் விவசாயிகள் மேட்டூர் அணைக்கு காவிரி நீரை பெற்றுத் தந்து அணையை பாசனத்திற்கு திறக்க வேண்டும் என வலியுறுத்துவர். ஆனால் இந்த ஆண்டு தற்போது மேட்டூர் அணையில் 112.7 7 அடி நீர் உள்ளது அணைக்கு சுமார் 30 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது ஒகேனக்கலில் 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வருகிறது இதனால் வழக்கமான ஜூன் 12 அல்லது அதற்கு முன்பாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு மேட்டூர் அணை திறப்பு அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட்டு தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்து விதை நெல் பயிர் கடன்களை வழங்கினால் இந்த ஆண்டும் முப்போக சாகுபடி சாத்தியமாகும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )