BREAKING NEWS

மேலச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரைப்படம் நடிகர் ராமராஜ் நேற்று இரவு உயிரிழந்தார்.

மேலச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரைப்படம் நடிகர் ராமராஜ் நேற்று இரவு உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரைப்படம் நடிகர் ராமராஜ் என்பவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி திரைப்படம் நடிகர் ராமராஜ் உயிரிழந்தார் இதையடுத்து அவரது உடலை முதுகுளத்தூரில் உள்ள அவரது சொந்த வீட்டில் பொதுமக்கள் மரியாதைக்காக வைக்கப்பட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திரைப்பட நடிகர் ராமராஜ், அவன் இவன் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதையடுத்து உயிரிழந்த திரைப்பட நடிகரின் இறுதி சடங்கு இன்று மாலை 3 மணி அளவில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )