ரயிலில் அடிபட்டு இருந்த திமுக கிளைச் செயலாளர் குடும்பத்துக்கு நிதி உதவி ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி வழங்கினார்.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்துள்ள, இலங்கியனூர் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த திமுக கிளை செயலாளர் கலியபெருமாளின் குடும்பத்தாரை திமுக மாநில செயற்குழு உறுப்பினரும், நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான பாவாடை கோவிந்தசாமி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி 10000 நிதி உதவி வழங்கினார்.
அப்போது ஒன்றிய துணை செயலாளர்கள் மாரிமுத்தாள் குணா, அன்புக்குமரன், ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் நல்லூர் தனசேகரன், நகர் பாபு, முன்னாள் கிளை செயலாளர் இலங்கியனூர் ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்து ஆறுதல் தெரிவித்தார்கள்.
CATEGORIES கடலூர்