BREAKING NEWS

ராதாபுரம் ஒன்றியம் ஆவுடையாள்புரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா.

ராதாபுரம் ஒன்றியம் ஆவுடையாள்புரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா.

நெல்லை மாவட்டம்,இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையாள்புரத்தில், ஆவுடை இளைஞர்கள், பொது மக்கள் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடபட்டது.

இதில் ஒன்றிய கவுன்சிலர் ஆவுடை டி. பாலன் ஆவுடையாள்புரத்தில் காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி, ஆவுடையாள்புரத்தில் இருந்து நவலடி, உலகரட்சகர்புரம் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளிகளில் முதலாவது, இரண்டாவது மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டி பரிசுகள்வழங்கினார்.

பின்னர் கூடன்குளத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மேளதாளம் முழங்க மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பெரியவர்கள், இளைஞர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். சமூக சேவகர் வெள்ளைபுறா வி.ரவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆவுடையாள்புரம் இளைஞர்கள் மற்றும் ஆவுடை கிங்மேக்கர் அசோசியேசன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

படவிளக்கம். நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றியம் ஆவுடையாள் புரத்தில் பெரும்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவில் ஒன்றிய கவுன்சிலர் ஆவுடை பாலன் இனிப்பு வழங்கினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )