ரூ.17.32லட்சம் மதிப்பிலான புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து கடைக்கோடி பகுதியிலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.

திருப்பனந்தாள் அருகே மனக்குண்ணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.17.32லட்சம் மதிப்பிலான புதிய பள்ளி கட்டிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் அரசு தலைமை கொறடா கோவி செழியன், ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன்,ஒன்றிய குழு துணை தலைவர் அண்ணாதுரை ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தமிழகத்தின் கடைக்கோடி பகுதியிலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது எனவும் அரசின் பல்வேறு துறைகள் இருந்தாலும் பள்ளிக்கள்வித்துறைக்கு தான் முதலமைச்சர் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் அந்த வகையில் பெரும்பாலான பள்ளி கட்டிடங்கள் புதுமையாக கட்டி மாணவ மாணவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
ஆன்மீக திருக்கோயில் வழியாக அறிவு திருக்கோயிலை திறக்கும் இந்நிகழ்வு மிகுந்த திருப்தியை ஏற்படுத்தியுள்ளது எனவும் கூறினார். நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
