BREAKING NEWS

ரேணுகாம்பாள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா..!

ரேணுகாம்பாள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா..!

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த கலவை கூட்ரோடு பகுதியில் ரேணுகாம்பாள் கோயிலில் கூழ்வார்க்கம் விழா நேற்று நடைபெற்றது.

 

முன்னதாக பெண்கள் விரதம் இருந்து தங்கள் விலை நிலத்தில் விளைந்த தானியங்களை கொண்டு அவரவர் வீட்டில் இருந்து கூழ் செய்து பாத்திரத்தில் கூழை ஊற்றி தலை மேல் சுமந்து கொண்டு கோவில் அருகே உள்ள பெரிய கொப்பரையில் கூழை ஊற்றி கூழ்வார்க்கும் விழா நடைபெற்றது.

 

தொடர்ந்து, பல்வேறு வண்ண மலர்கள் அலங்காரத்தில் 16 கைகள் உடன் ரேணுகாம்பாள் அம்மன் மங்கள வாத்தியம் முழங்க வானவேடிக்கையுடன் திருவீதி உலாவிவ் பெண்கள் வழி நெடுங்கிலும் சுவாமிக்கு கற்பூர தீபாரதனை காட்டப்பட்டது. பின்னர் இரவு நாடகம் நடைபெற்றது. இதில் மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS