”ரோட்டா புரோ” எனும் நவீன கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை:
![”ரோட்டா புரோ” எனும் நவீன கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை: ”ரோட்டா புரோ” எனும் நவீன கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை:](https://aramseithigal.com/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-26-at-10.42.25-AM-1.jpeg)
தஞ்சையில் முதன் முறையாக தனியார் மருத்துவமனையில் 81 வயதான முதியவருக்கு
இருதய குழாயில் கடினமான சுன்னாம்பு படிந்த அடைப்பை நீக்க, ஒரு நிமிடத்திற்கு 1,75,000 முறை சுழன்று சுன்னாம்பு அடைப்பை உடைத்து நீக்கக் கூடிய
“வைரக் கற்கள் பதித்த ”ரோட்டா புரோ” எனும் நவீன கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை:
தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் நவீன தொழில்நுட்பத்தில் இருதய ரத்த குழாயில் சுன்னாம்பு படிந்த கடினமான அடைப்பை நீக்க வைரக் கற்கள் பதித்த கருவி மூலம் அறுவை சிகிச்சை நடந்தது.
தரங்கம்பாடியை சேர்ந்த 81 வயது கணேசன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவருக்கு
புதிய தொழில் நுட்பத்தில் இருதய ரத்த குழாயில் சுன்னாம்பு படிந்த அடைப்பை நீக்க வைரம் பதித்த கருவி மூலம் இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் கேசவமூர்த்தி தலைமையிலான குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்.
இது குறித்து மருத்துவர் கேசவமூர்த்தி கூறுகையில், மாரடைப்பு நோயாளிகளுக்கு ஆஞ்சியோபிளாஸ்ட்டி மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை செய்ய படுகிறது.
வயது முதிந்தவர்களுக்கு ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது அதில் அதிக அளவு சுண்ணாம்பு படிவதால் அவர்களுக்கு அந்த அடைப்புகளை பலூன் மூலம் அகற்றுவது எளிதல்ல, எனவே இது போன்ற நோயாளிகளுக்கு சுண்ணாம்பு அடைப்பை நீக்குவதற்கு ரோட்டா புரோ எனப்படும் வைரக் கற்கள் பதித்த குடையும் கருவி உள்ளது. இந்த கருவி நிமிடத்திற்கு 1,75,000 முறை சுற்றும்.
இந்த வேகத்தில் இருதய ரத்த நாளத்தினுள் இது செல்லும் போது இயல்பான திசுக்களை வெட்டாமல் படிந்த சுண்ணாம்புகளை மட்டும் உடைத்து எடுத்து விடும். இதன்பிறகு நன்கு விரிவாக்கப்பட்ட குழாய்களில் ஸ்டென்ட் பொருத்தப்படும்
ரோட்டா புரோ எனப்படும் புதிய நவீன கருவி மூலம்
கணேசனுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு கணேசன் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.