லட்சுமிபுரத்தில் மூன்று சக்கர சைக்கிள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு லட்சுமி புரம் கிளை கழக செயலாளர் கணபதி தலைமை தாங்கினார்.
அச்சம் குன்றம் கிளைக் கழகச் செயலாளர் மாடசாமி முன்னிலை வகித்தார்.
ஒன்றிய பிரதிநிதி எம்.பி முருகன் வரவேற்று பேசினார்
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி காளிமுத்துவிற்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் செல்வக்கொடி ராஜா மணி, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகையா, மாவட்டஅமைப்புசாரா ஓட்டுனர் அணி தலைவர் ஒன்றிய கவுன்சிலர் அந்தோணிசாமி, முத்தம்மாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பி முருகன், பரங்குன்றாபுரம கிளைக் கழக செயலாளர் மனோகரன், ராமனூர் கிளைக் கழக செயலாளர் கணேசன், ஒன்றிய பிரதிநிதி பரமசிவம் , ஊத்துமலை கோல்டன் ராஜா , கார்த்திக், காங்கிரஸ் நிர்வாகி கே. டி.கே.குத்தாலிங்கம்,
ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக், கழக வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் அரசப்பன் நன்றி கூறினார்.