வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகள் வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம், பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட, அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகள் (Booth Slip) வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் .ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து, வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகளை வழங்கினார்.
அதன்படி அரியலூர் மாவட்டத்தில் 149- அரியலூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 306 வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த 2,58,774 வாக்காளர்களுக்கும் மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 290 வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த 2,57,259 வாக்காளர்களுக்கும் “பூத் சிலப்” எனப்படும் வாக்களார் சீட்டுகளை வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் துவக்கி வைத்து, அரியலூர் சட்டமன்ற தொகுதி, எருத்துக்காரன்பட்டி ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகளை (Booth Slip) வழங்கினார்.
மேலும், அனைத்து வாக்காளர்களுக்கும் விடுபடாமல் வாக்காளர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று வாக்காளர் சீட்டுகளை உரிய வாக்காளர்களிடம் வழங்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் .ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் .ராமகிருஷ்ணன், அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல், வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்டம் செய்தியாளர் D. வேல்முருகன்.