BREAKING NEWS

விரைவில் இந்தியாவிலும் ஸ்கை பஸ்…

விரைவில் இந்தியாவிலும் ஸ்கை பஸ்…

இந்தியாவில் விரைவில் ஸ்கை பஸ் திட்டம் அறிமுகமாக இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு. இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் விரைவில் ஸ்கை பஸ்கள் எனப்படும் பறக்கும் பேருந்துகளும் அறிமுகமாக உள்ளன. போக்குவரத்து நெரிசலில் இருந்து சற்று விடுபட இது ஒரு நல்ல திட்டம் என பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.

 

 

ஸ்கை பஸ் என்பது மெட்ரோவை போலவே இருக்கும் ஒரு போக்குவரத்து அமைப்பாகும். மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த பேருந்துகளில் பயணிகள் பயணிக்கலாம். எரிபொருளுக்கு மாற்றாக மின்சார ஆற்றலை பயன்படுத்தலாம். டெல்லி மற்றும் ஹரியானாவில் சில பகுதிகளில் ஸ்கை பஸ்களை இயக்க பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசை குறைப்பதற்கான மாற்று வழியாக இது இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )