விளையாட்டு செய்திகள்
மகளிர் உலககோப்பை கிரிக்கெட். ஹெய்லி மத்தீவ்ஸ் அபார சதம் . நியூசிலாந்துக்கு 260 ரன்கள் இலக்கு.
8 அணிகள் பங்கேற்கும் 12-வது மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் இன்று தொடங்கியது. இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்இழப்புக்கு 259 ரன்கள் குவித்தது.
இதில் அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீராங்கனை ஹெய்லி மத்தீவ்ஸ் 119 ரன்கள் குவித்தார். கேப்டன் ஸ்டபினி டெய்லர் 30 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி சார்பில் லியா 3 விக்கெட்கைப்பற்றினார். இதைதொடர்ந்து களமிறங்கியுள்ள நியூசிலாந்து அணி260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
CATEGORIES விளையாட்டுச் செய்திகள்