வீட்டில் ஆள் யாரும் இல்லாத சமயம் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பெண்கள் திருட முயன்றதாக கணியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த ஜோத்தம்பட்டி கிராமத்தில் உள்ள இரத்தினசாமி என்பவரின் வீட்டில் ஆள் யாரும் இல்லாத சமயம் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பெண்கள் திருட முயன்றதாக கணியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
ரத்தினசாமி வீட்டினை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளதாகவும் அந்தபகுதி வந்த பெண்கள் வீட்டின் பூட்டை உடைத்து திருடுவதற்கு முயற்சி செய்துள்ளனர். வீட்டின் அருகே உள்ள ரத்தினசாமியின் தம்பியான சோமசுந்தரம் வீட்டின் பூட்டை உடைத்தனர்.

பின்னர் வீட்டின் அருகில் இருந்தவர்கள் திருட வந்த பெண்களை சுற்றி வளைத்து பிடித்து கணியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.பின்னர் காவல் துறையினர் இரண்டு பெண்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் சேலத்தைச் சேர்ந்த பார்வதி(32),சித்ரா(30) என்பது தெரிய வந்தது. பின்னர் திருட முயன்றதை ஒப்புக்கொண்டதன் பெயரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
