வெங்கையா நாயுடுவுக்கு ஸ்டாலின் நேரில் வாழ்த்து !

இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது 73வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவர்களும் பல்வேறு அரசியல் தலைவலர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை கிண்டில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார். இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளர்.முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெங்கையா நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதில், “‘நமது மாண்புமிகு துணைத் ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் நம் நாட்டிற்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன். எந்தவொரு சூழ்நிலையிலும் நேர்மை, விவேகம் மற்றும் நகைச்சுவையின் சாயல் நிறைந்த உங்கள் புகழ்பெற்ற வாழ்க்கை, பொது வாழ்க்கையில் நம் அனைவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.” என பதிவிட்டுள்ளார்.சமீபத்தில் கூட மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை அவரை அழைத்து வந்து திறக்கச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Uncategorized
TAGS தலைப்பு செய்திகள்