BREAKING NEWS

வெள்ளரிவெள்ளி ஏரி அதன் முழு கொள்ளளவு எட்டியுள்ள நிலையில் ஏரியின் நீர் வழி ஆக்கிரமிப்பை அகற்றி கழுங்கு வழியாக ஏரியின் உபரி நீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை.

வெள்ளரிவெள்ளி ஏரி அதன் முழு கொள்ளளவு எட்டியுள்ள நிலையில் ஏரியின் நீர் வழி ஆக்கிரமிப்பை அகற்றி கழுங்கு வழியாக ஏரியின் உபரி நீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை.

 

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி ஏரியானது சுமார் 56 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது கடந்த சில மாதங்களாக பெய்த கனழையால் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் தற்போது அதன் உபரி நீரானது வெளியேறி வருகிறது. 

 

மேலும், ஏரி அதன் அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் ஏரிக்கு வரும் நீரானது பில்லுக்குறிச்சி, சுள்ளிமுல்லூர், ஆத்துகாடு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தார் சாலையில் 100 மீட்டர் தூரத்திற்க்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் சிரமத்திற்க்கு ஆளாகியுள்ளனர்.

 

 

 இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் சாலையில் உள்ள மழைநீரை வெளியேற்று தருமாறு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரவிச்சந்திரனிடம் மனு கொடுத்தனர்.

 

இதனைத் தொடர்ந்து, தகவலின் பெயரில் வெள்ளரி வெள்ளி ஏரியை பார்வையிட்ட ரவிச்சந்திரன் ஏரியின் கழுங்கு வழியாக உபரி நீரை வெளியேற்ற முயற்ச்சிகளை மேற்க்கொண்டார்.

 

 

இத்தகவல் அறிந்த வந்த காதாட்டியூர், சப்பானிபட்டி, கொடைக்கவுண்டனூர், பகுதி விவசாயிகள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் உபரிநீரை ஏரி கழுங்கு வழியாக வெளியேற்றினால் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து விவசாயம் பாதிக்கப்படும்.

 

எனவே ஏரியின் ஒவ்வொரு செல்வதற்கான நீர் வழி ஆக்கிரமிப்பை மீட்டு அந்த வழியாக ஏரியின் உபரி நீரை நீரை வெளியேற்றுமாறு வேண்டுகோள் விடுத்தனர். 

 

மேலும், மூன்று நாட்களுக்குள் நீர் வழி ஆக்கிரமிப்புகளை மீட்டு அதன் வழியாக ஏரி நீரை வெளியேற்றப்படும் என உறுதி அளித்ததால் அங்கிருந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )