வேப்பூர் அருகே பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 3 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

வேப்பூர் அருகே பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 3 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், சேப்பாக்கம் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை அவர்களின் 15ஆவது நிதி குழு மானிய நிதி சுமார் 3 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

 

சிறப்பு அழைப்பாளர்களாக திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்க. நாராயணசாமி,மாவட்ட கவுன்சிலர் நகர் சி. சக்தி விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தனர்.

 

அப்போது ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, ஒப்பந்ததாரர் கொளப்பாக்கம் வேல், திமுக மாணவரணி நிர்வாகி மாரிமுத்து மற்றும் கிராம இளைஞர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS