வேலூர் மாவட்டத்தில் சைபர் செல் பிரிவு தொடக்கம்!

காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் S. ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில், அண்மையில் வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும், Cyber Cell தொடங்கப்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் Cyber Crime supporting Officer (SSI – 1, Gr.I – 1, PC – 1) ஆகியோர்கள் கொண்ட 51 காவல் அதிகாரி மற்றும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் புகார் அளிப்பது தொடர்பான சிறப்பு வகுப்பு மற்றும் பயிற்சி இவர்களுக்கு அளிக்கப்பட்டது.
இவர்கள் இணைய குற்றம் தொடர்பாக காவல் நிலையங்களுக்கு அணுகும் பொதுமக்களை உடனடியாக அவர்கள் புகார் தெரிவிக்க வேண்டிய National Cyber Crime Reporting portal (NCRP) என்ற இணையதளத்தில்
www.cybercrime.gov.in
என்ற இணையதள முகவரியில் உடன் புகார் பதிவு செய்யவும், பணம் இழப்பு தொடர்பான புகார்களை 1930 என்ற சைபர்கிரைம் Helpline numberக்கு தொடர்பு கொண்டு புகார் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது சிறப்புரையில், ‘சைபர் கிரைம் (இணையவழி குற்றங்கள்) பற்றி பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை எனவும், சைபர் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் எங்கு சென்று புகார் தெரிவிக்கவேண்டும்.
என போதுமான தகவல் தெரியாததாலும், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் பொதுமக்களின் சிரமத்தை போக்கவேண்டி ஒவ்வொரு காவல் நிலையங்களில் தனியா Cyber crime cell தொடங்க உத்தரவு பிறப்பித்ததின்பேரில், தற்சமயம் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் தனியாக cyber Crime cell தொடங்கப்பட்டள்ளது.
மேலும் சைபர் கிரைம் புகார் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகாரை பெற்று உடனடியாக மனு ரசீது (CSR) வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற சைபர் கிரைம் குற்றங்களுக்கு உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் C.R. பூபதி ராஜன், DCB (I/C) CCW மற்றும் காவல் ஆய்வாளர் அபர்ணா, CCW மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் கலந்து கொண்டார்கள்.
