ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பால்குட விழா.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஐந்தாம் ஆண்டு ஸம்வஸ்த்ராபிஷேக விழாவும் மற்றும் பால்குட விழாவும் நடைபெற்றது.
விக்ரமன் ஆற்றங்கரைலிருந்து சக்தி கரகம் புறப்பட்டு பால்குடங்களுடன் வான வேடிக்கை முழங்க மேலதாள வாத்தியங்களோடு அனைத்து வீதிகள் வழியாகவும் ஊர்வலமாக கோவிலை வந்திருந்தனர்.
பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு ஹோமங்களும் அபிஷேக ஆராதனையும் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது புதிதாக அம்மனுக்கு வெள்ளிக் கவசம் சாற்றி அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தால் இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.
