BREAKING NEWS

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் தேனியில் ரத்த தானம் முகாம் நிகழ்ச்சி.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் தேனியில் ரத்த தானம் முகாம் நிகழ்ச்சி.

தேனி அருகே கருவேல் நாயக்கன் பட்டியில் உள்ள தனியார் மஹாலில், எஸ்.ஆர்.தமிழன் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் கட்சியின் மாவட்ட பொது செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் ரத்த தானம் முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்த முகாமில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் கோவில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கபாண்டியன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினார்.

 

 

இந்த முகாமில் மாவட்ட தலைவர் ராமசாமி, மாவட்ட துணை தலைவர் சேகர், நகரச் செயலாளர் அன்பு ஏராளமானோர் கலந்து கொண்டனர். இம்முறையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஏராளமானோர் ரத்த தானம் செய்து வந்தனர். ரத்தம் தானம் செய்தவர்களுக்கு பழரசம் போன்ற உணவுப் பொருட்களை வழங்கினர்.

 

பின்னர் இரத்தம் வழங்கியவர்களுக்கு சான்றுகளை யும் வழங்கி வந்தனர். இந்த முகாமில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த சேமிப்பு வங்கியின் மருத்துவக் குழுவினர் ரத்த மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

தேனி செய்தியாளர் முத்துராஜ்

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )