BREAKING NEWS

அக்னி பாதை திட்டத்தை கைவிட கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

அக்னி பாதை திட்டத்தை கைவிட கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் அக்னி பாதை திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார்.


ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் அக்னி பாதை திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் ராமநாதன், லட்சுமிநாராயணன், மாநில விவசாய பிரிவு செயலாளர் மணிவண்ணன், மாநகர பொருளாளர் பழனியப்பன், மாநகர பொதுச் செயலாளர் கண்ணன், மாமன்ற உறுப்பினர் ஹைஜாக்கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்:
தஞ்சாவூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னி பாதை திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )