அங்கன்வாடி மையத்திற்கு முன்பாக தீவு போல தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மணியக்காரன்பட்டியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கு முன்பாக பல மாதங்களாக தீவு போல தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீர்,
போடிதாசன்பட்டி கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் மையத்திற்கு வெளியிலேயே குப்பைகள் கொட்டி தீ வைத்து எரிக்கப்படுவதால் பல்வேறு தொற்று நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு,
இங்கு 25 குழந்தைகள் படித்து வரும் நிலையில் நாள்தோறும் ஐந்து முதல் ஏழு குழந்தைகள் வரை மட்டுமே அங்கன்வாடி பள்ளிக்கு வருவதாகவும் வீடு வீடாக சென்று குழந்தைகளை அனுப்பச் சொன்னாலும் அச்சத்தால் பெற்றோர்கள் தொடர்ந்து குழந்தைகளை அனுப்ப மறுத்து வருவதாகவும் அங்கன்வாடி பணியாளர்கள் வேதனை.
CATEGORIES தேனி
TAGS ஆண்டிபட்டிகுற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனி மாவட்டம்போடிதாசன்பட்டிமணியக்காரன்பட்டி அங்கன்வாடி மையம்