BREAKING NEWS

அசிங்கப்படுத்திய ஒன்றிய செயலாளர் அவமானப்பட்ட மாவட்ட அவை தலைவர் வேப்பூர் அருகே அதிமுக கட்சிக்குள் சலசலப்பு.

அசிங்கப்படுத்திய ஒன்றிய செயலாளர் அவமானப்பட்ட மாவட்ட அவை தலைவர் வேப்பூர் அருகே அதிமுக கட்சிக்குள் சலசலப்பு.

அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட அவைத்தலைவராக இருப்பவர் தங்கராசன், இவர் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர், அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் ஆகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும், நல்லூர் ஒன்றிய பெருந்தலைவராகவும் பதவி வகித்தவர்.

 

இதன் காரணமாக இவர் பணியை பாராட்டி கடலூர் மேற்கு மாவட்டத்திற்கு அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார். இதனிடையே பதவியேற்ற பிறகு எம்ஜிஆரின் 160 வது பிறந்த நாளை முன்னிட்டு முதல் பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் அவைத் தலைவர் என்ற முறையில் மேடையின் முன்வரிசையின் நடுப்பகுதியில் அமர்ந்திருந்தார். பின்னர் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித் தேவன், விருதாச்சலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன், புவனகிரி முன்னாள் எம்எல்ஏ அருள் ஆகியோர் மேடைக்கு வந்தபோது நல்லூர் ஒன்றிய செயலாளர் பச்சமுத்து மற்றும் நிர்வாகிகள் மேடைக்கு இடது புறமாக இரு இருக்கைகள் அமைத்து அதில் மேற்கு மாவட்ட அமைத்தலைவர் தங்கராசுவை அமர வைத்து ஓரம் கட்டினர்.

 

வேதனையில் செய்வதறியாமல் ஓரம் சென்று அமர்ந்தார். இதனால் பட்டியல் இனத்தவர் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Share this…

CATEGORIES
TAGS