BREAKING NEWS

அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது

அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது

கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது

25 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

கேரள மாநிலத்தில் உள்ள அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவிலில் மண்டல பூஜைக்கான கொடி ஏற்றம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

தந்திரி கண்டரரு மோகனர் தலைமையில் மேல்சாந்தி அனீஸ் நம்பூதிரி  கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடி ஏற்றப்பட்டது.. ஐந்தாவது நாள் வரை திருவிழாக்களில் பிரதானமாக உற்ஷவபலி நடைபெறும்.6,7 நாள் திருவிழாக்களில் பிரதானமாக கருப்பன் துள்ளலும் 8ம் திருநாளில் பள்ளிவேட்டையும் நடைபெறும். 9ம் திருவிழாவான 25ஆம் தேதி அன்று கேரளத்தில் எங்கும் இல்லாத விதமாக தேரோட்டம் நடைபெறும்.

10 ம் நாள் முக்கிய விழாவான ஆராட்டு திருவிழா நடைபெறும்.. 27ஆம் தேதி அன்று மதியம் மண்டல பூஜை  நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்ப்பாடுகளை அச்சன்கோவில் தேவசம் சார்பாக தேவசம்போர்டு உதவி ஆனையர் வினோத்குமார் தலைமையில் நிர்வாக அதிகாரி  நிர்மலானந்தன் செய்து வருகிறார்.

திருவிழா நாட்களில்  தினமும் சுவாமிக்கு திருவாபரணம் அணிவிக்கபடும். சுவாமியை திருவாபரணங்களுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்கள தரிசனம் செய்யலாம்.இந்த திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன..  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பினர் சார்பாக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

CATEGORIES
TAGS