அடுத்த 5 நாட்களுக்கு 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
அடுத்த 5 நாட்களுக்கு 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

தமிழகம்,புதுச்சேரியில் இன்று முதல் மே24ம் தேதி வரை 5 நாட்கள் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் லட்சத்தீவு,கேரள கடலோரப் பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகள்,மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தற்போது உள் மாவட்டங்களில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதில் மே 20 ம் தேதி இன்று வியாழக்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அத்துடன் நீலகிரி, கோவை ,திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர் மபுரி, சேல ம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
