BREAKING NEWS

அதிகாரிகளின் அலட்சியம்: குரூப் 2 தேர்வர்கள் வேதனை.

அதிகாரிகளின் அலட்சியம்: குரூப் 2 தேர்வர்கள் வேதனை.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வு நாளை மே.21 ம் தேதி நடைபெற உள்ளது. உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் பொள்ளாச்சி, ஆனைமலை, திருப்பூர், தாராபுரம் என பல்வேறு ஊர்களுக்கு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் காலை 8.30 மணிக்குள் மையத் திற்குள் இருக்க வேண்டும் எனவும் உத்தரவும் போடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மற்றும் தாராபுரம் என 2 மையங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் இருந்து தேர்வு எழுத செல்பவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதிகாலை எழுந்து பேருந்துகளை பிடித்து நீண்ட தூரம் பயணம் செய்து தேர்வு எழுதும் மையத்திற்கு செல்லும் கட்டாயத்திற்கு தேர்வர்கள் தள்ளப்பட்டுள்ளது வேதனைக்கு உரிய ஒன்றாகும்.
உடுமலையில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள் நல்ல கட்டமைப்பில் இயங்கி வருகிறது. இங்கே ஒரு தேர்வு மையத்தை ஒதுக்காமல் ஆயிரக்கணக்கான தேர்வர்களை வீண் அலைச்சலுக்கு உள்ளாக்கியுள் ளதற்கு துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தாதே காரணம் என பெற்றோர்களும், கல்வியாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )