அதிமுகவிலிருந்து ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் நீக்கம்: பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்.

கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். இதனால், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது. தலைமை அலுவலகத்தின் கதவை உடைந்த ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் உள்ளே சென்றார். மோதலில் காயமடைந்த இரு தரப்பையும் சேர்ந்த 10 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
