அதிமுகவில் தற்போது நிலவும் குழப்பத்திற்கு மூலகாரணம் – பாஜக உடன் அதிமுக கொண்ட கூடா நட்பே என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றச்சாட்டு.

கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகைதந்த ஜவாஹிருல்லா எம்எல்ஏ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;-
1999ஆம் ஆண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பா.ஜ.க வுடன் நாங்கள் கொண்ட கூட்டணிக்கு மன்னிப்புக் கோருகிறோம் என்று தெரிவித்ததுடன், இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது என தெரிவித்தார்.
ஆனால் தற்போது ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக அதிமுக தற்போது பாஜகவின் அடிமையாக செயல்படுகிறது என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியில் பாஜகவிற்கு எதிராக பேசியதற்காக இஸ்லாமிய இயக்க தலைவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால் நபிகள் நாயகம் பற்றி நுபூர் சர்மா பேசியதற்கு நாடெங்கும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அவர் கைது செய்யப்படவில்லை. பாஜகவினரின் பாரபட்ச போக்கு கண்டிக்கத்தக்கது என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் யஸ்வந்த் சின்ஹாவை மனிதநேய மக்கள் கட்சி ஆதரிக்கிறது என்றும், பாஜக இதற்கு முன் பட்டியலினத்தவர் எனக்கூறி ராம்நாத் கோவிந்த் ஐ நிறுத்தியது அவரது ஆட்சிக்காலத்தில் பட்டியல் இனத்தவர் எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், தற்போது பழங்குடி இன பெண்மணி ஒருவரை நிறுத்தி உள்ளது.
இதன் மூலம் பாஜக கண்கட்டி வித்தை நடத்துகிறது என ஜஹாஹிருல்லா கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
இணையதள தொலைகாட்சி ஒன்றின் ஆசிரியர் முகமது ஜுபேர் பாஜகவை விமர்சனம் செய்தற்காக கைது செய்யப்பட்டார். இக் கைதை கண்டிப்பதாகவும் ,
சமூக ஆர்வலர்கள் டீஸ்ட்சா செட்டில் வாடா மற்றும் ஆர்.வி. ஸ்ரீகுமார் ஆகியோர் ஆகியோரை கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் எதிர்வரும் ஜூலை 5ஆம் தேதிமனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக ஜவாஹிருல்லா கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கும்பகோணம் வட்டத்திற்கு உட்பட்ட பாபநாசம் தொகுதியைச் சேர்ந்த 28 குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
