BREAKING NEWS

அதிமுக இணைஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பதவி வழங்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது.அதில் ஓபிஎஸ்.,இபிஎஸ் இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டது. எனவே பொதுக்குழு கூட்டம் ஜூலை11க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “அதிமுகவில் அனைத்து பதவிகளும் 5 ஆண்டு காலம் தான். ஓபிஎஸ்-சின் ஒருங்கிணைப்பாளர் பதவி, ஈபிஎஸ்-சின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டது.ஏற்கனவே திருத்தப்பட்ட சட்டவிதிகளுக்கு நேற்றைய பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் காலாவதியானது. அதாவது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் அந்த பதவிகள் கலவாதியாகின.

இந்த பதவிகளுக்கு அதிகாரமளிக்கும் சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை என்பதால் அதுவும் தற்போது காலாவதி ஆகிவிட்டது.அதனால், ஓ.பன்னீர்செல்வம் தற்போது ஒருங்கிணைப்பாளர் அல்ல, வெறும் பொருளாளர் மட்டுமே. அதனைப் போல, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக செயல்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )