BREAKING NEWS

அதிமுக பொதுக்குழுவை ஆன்லைனில் நடந்த பரிசீலனை… காரணம் இதுதானாம்!! அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவை ஆன்லைனில் நடந்த பரிசீலனை… காரணம் இதுதானாம்!! அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த 23 ஆம் தேதி நடத்தப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். இந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது குறித்து சென்னையில் கடந்த 14 ஆம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதிமுகவை முன்பு போல விறுவிறுப்பாக செயல்பட வைக்க ஒற்றை தலைமை முறையே சிறந்தது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவில் பிரச்னை வெடித்தது.

 

இதனிடையே அதிமுகவின் அடுத்த பொதுக் குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இதையடுத்து அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடத்தும் ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. அடுத்த மாதம் நடைபெற்ற உள்ள பொதுக் குழுவை வானகரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு நடத்தாமல் மாற்று இடத்தை நிர்வாகிகள் தேர்வு செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து மீனம்பாக்கம், ஒஎம்ஆர் சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடத்தலாம் என பரிசீலிக்கப்பட்டது. பின்னர் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் விஜிபி ரிசார்டில் பொதுக் குழுவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பொதுக் குழு நடைபெறும் இடத்தை தயார் செய்யும் பணிகளை அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர். அதிமுக எம்எல்ஏக்கள் அந்தப் பணிகளை பார்வையிட்டனர். இந்த நிலையில் ஈசிஆர் விஜிபியில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடத்தும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது.

 

சென்னையை அடுத்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடு இருப்பதால் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறும் இடம் தொடர்பான குழப்பம் தொடர்ந்து நீடித்து வந்தது. பின்னர் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்திலேயே மீண்டும் பொதுக் குழுவை நடத்தி கொள்ள நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுவை நடத்தும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.பெரும்பாலும் நேரடியாக பொதுக்குழுவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடயே தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. ஆகவே கொரோனாவை காரணம் காட்டி தமிழக அரசு பொதுக்குழு நடத்த அனுமதி மறுக்கும்பட்சத்தில் ஆன்லைனில் அதிமுக பொதுக்குழுவை நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதற்கு தயாராக இருக்கும் படி பொதுக்குழு உறுப்பினர்கள் தலைமை கழக நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )