அதிமுக 51வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் உள்ள MGR சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேனி செய்தியாளர் முத்துராஜ்.
அதிமுக 51வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கழகத்தின் சார்பில் தேனி -அல்லிநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் உள்ள MGR சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு OPS ஆதரவு அல்லிநகரம் நகரக் கழகச் செயலாளர் ரங்கநாதன் தலைமை ஏற்று நடத்த, நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன் மாவட்ட மீனவர் அணி செயலாளர் கைகை கருப்பு மாவட்ட மாணவரணி செயலாளர் ஜெயக்குமார்.,
நகர துணை செயலாளர் மயில்வேல் நகர இணை செயலாளர் போது மணி ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட பிரதிநிதியும் நகர மகளிர் அணி நிர்வாகியுமான ராமுத்தாய் ஐந்தாவது வார்டு செயலாளர் ஐயப்பன் ஏழாவது வார்டு செயலாளர் பால்பாண்டி 12-வது வார்டு செயலாளர் குமார்,.
தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பொன்னீஸ்வரன் ஐந்தாவது வார்டு தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர் கிருஷ்ண பிரபா உள்ளிட்ட…,
மாவட்ட நகர ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 51-வது ஆண்டு துவக்க விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
