BREAKING NEWS

அந்தியூரில் ஆசிரியையின் கழுத்தை கத்தியால் அறுத்த வாலிபரை பிடித்த காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்களுக்கு போலீசார் பாராட்டு.

அந்தியூரில் ஆசிரியையின் கழுத்தை கத்தியால் அறுத்த வாலிபரை பிடித்த காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்களுக்கு போலீசார் பாராட்டு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையத்தில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் குன்னூர் பகுதியைச் சேர்ந்த ராஹீலாவும் இவருடைய பெரியம்மா மகன் ஜீவா என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இருவரும் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் செல்லும் பொழுது ஜீவா திடீரென ராஹீலாவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார்.

 

இதனால் ராஹீலா சத்தமிட்டதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் உடனடியாக ஜீவாவை துரத்திச் சென்று பிடித்து அந்தியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

மேலும் ராஹீலாவை அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து ஜீவாவை பிடித்து அந்தியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநர்களுக்கு அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் தேனீர் விருந்து கொடுத்து பாராட்டு தெரிவித்தனர்.

 

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

CATEGORIES
TAGS