அந்தியூரில் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் மற்றும் ஈரோடு மாவட்டம் சங்கம் சார்பில் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அந்தியூர் தாலுகா இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் முனாப் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தனிப்பிரிவு தலைமை காவலர் மெய்யழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டது மேலும் சங்கத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது இக்கூட்டத்தில் ஈரோடு. பெருந்துறை. புளியம்பட்டி. சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பொருளாளர் குமார். செயலாளர் பாரூக். சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஜாகிர் உசேன். சி ஐ டி மதிவாணன். மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட சுமார் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
