அந்தியூரில் இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது இருசக்கர வாகனம் பறிமுதல்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அண்ணா மடுவு பகுதியில் அந்தியூர் உதவி ஆய்வாளர் கார்த்தி சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் குற்றப்பிரிவு தலைமை காவலர்கள் பெரியண்ணன். மெய்யழகன். அந்தியூர் காவல் நிலைய தலைமை காவலர் மாதேஷ். ஆகியோர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அந்தவாகனம் கடந்த வாரம் அந்தியூர் பவானி ரோட்டில் உள்ள யாஷ் என்பவரது வாகனம் பழுது பார்க்கும் கடையில் திருடப்பட்டது என தெரியவந்தது.
விசாரணையில் வாகனத்தை திருடிய வாலிபர் தர்மபுரி மாவட்டம் நெருப்பூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் பாண்டி (வயது 28 ) என தெரியவந்தது.
உடனடியாக அவரை கைது செய்த அந்தியூர் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES Uncategorized