BREAKING NEWS

அந்தியூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வாலிபர் பலி.

அந்தியூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வாலிபர் பலி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி இவரது மகன் சிவசிதம்பரம் வயது 28 இவர் அந்தியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

 

இந்நிலையில் இரவு பணியை முடித்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக அந்தியூர் பர்கூர் ரோட்டில் அரசு மருத்துவமனை அருகே வரும் பொழுது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் வாலிபர் சிவசிதம்பரம் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்தியூர் சப்இன்ஸ்பெக்டர் கார்த்தி பிரேதத்தை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

 

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

CATEGORIES
TAGS