அந்தியூரில் குட்டையில் மீன் பிடிக்க சென்ற மூன்று சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாப பலி.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவர்களான நநது கிஷோர்.ராகவன். சிவனேசன். ஆகிய மூன்று பேரும் இன்று மாலை தவிட்டுப்பாளையம் செங்காட்டு குட்டையில் மீன் பிடிப்பதற்காக சென்று உள்ளனர்.
மீன் பிடிக்கும்போது குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்றதால் மூன்று சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீண்ட நேரம் ஆகியும் சிறுவர்களை காணாத அவரது பெற்றோர்கள் அப்பகுதியில் உள்ள செங்காட்டு குட்டை க்கு சென்று பார்த்த பொழுது மூன்று சிறுவர்களும் தண்ணீரில் உயிரிழந்தபடி கிடந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக அங்கு வந்த அந்தியூர் தீயணைப்பு துறையினர் மூன்று சிறுவர்களின் உடல்களை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார் அந்தியூர் பகுதியில் 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது அந்தியூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.